ஒரு கைப்பிடி பருப்பை கொஞ்சம் மஞ்சள் தூள், இரண்டு பல் பூண்டு, கொஞ்சம் எண்ணெய் விட்டு தேவையான அளவு தண்ணீரில் கொதிக்க வைக்கவும்.
பருப்பு நன்றாக வெந்து மலர்ந்துவிட்ட பிறகு அதில் சிறிய வெங்காயம், பச்சை மிளகாய் பாதி, அறிந்த காய் கொஞ்சம் உப்பு, கொஞ்சம் மிளகுதூள்
கால் தேக்கரண்டி சோம்புத்தூள் எல்லாம் ஒரே நேரத்தில் போட்டு காய் நன்றாக வேகும் வரை கொதிக்க விடவும்.
காய் வெந்த பிறகு, கடுகு உளுத்தம்பருப்பு, சோம்பு, கறிவடகம் கறிவேப்பிலை, பெருங்காயம் போட்டு
தாளித்து கொட்டவும்.
இந்தக் கூடு செய்ய சுரைக்காய், சௌசௌ, முட்டைகோஸ், பயிற்றங்காய், புடலங்காய், கீரை வகைகள்
அனைத்தையும் போட்டு சமைக்கலாம்.