இடியாப்பம் - 4
வெங்காயம் - 1
இஞ்சி பூண்டு விழுது 1/2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 1
முட்டை 2
மஞ்சள் 1/4
சோம்புத்தூள் 1/4
உப்பு கொஞ்சம்
மிளகுத்தூள் கொஞ்சம்
பால் கொஞ்சம்
பட்டை, கிராம்பு, ஏலக்காய் கொஞ்சம்.
1.இடியாப்பத்தை நன்கு உதிர்த்துக் கொள்ளவும்.
2.வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
3.முட்டையை உடைத்து கொஞ்சம் பால், உப்பு மிளகுத்தூள் சேர்த்து அடித்துக் கொள்ளவும்.
4. பச்சை மிளகாயை கீறி துண்டு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
5. வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு பட்டை கிராம்பு ஏலக்காய் போட்டு தாளிக்கவும்.
6. வெங்காயம் போட்டு வதக்கி, மிளகாயைப் போடவும்.
7. இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக் கொள்ளவும்.
8. மஞ்சள் தூள், சோம்புத்தூள், உப்பு , மிளகுத்தூள் போடவும்.
9. முட்டை போட்டு நன்கு கிண்டவும்.
10.முட்டை முக்கால் வெந்ததும் உதிர்த்த இடியாப்பத்தைப் போட்டு நன்கு கிளறவும்.
11. உப்பு பார்த்து தேவைக்கேற்ப சேர்க்கவும்.
No comments:
Post a Comment